சமூகம்

நேற்று 4 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டன.

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 422,454 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினத்தில் 203,515 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், 18,483 பேருக்கு சைனோபாம் இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 22,981 பேருக்கு அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசியும், 174,985 அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, 2,490 பேருக்கு நேற்றைய தினம் மொடர்னா முதலாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button