உலகம்

தலிபான் அமைப்பின் உயர்நிலை தலைவர்கள் மூவருக்கு விடுதலை.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களால்  தடுத்துவைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் இருவரை விடுவிப்பதற்காக, தலிபான் அமைப்பின் உயர்நிலை தலைவர்கள் மூவருக்கு விடுதலை வழங்கவுள்ளதாக ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.

தலைநகர் காபூலில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்களாகக் கடமையாற்றிய அமெரிக்கப் பிரஜையொருவரும், அவுஸ்ரேலியப் பிரஜையொருவருமே தலிபான்களால் 2016 ஆம் ஆண்டில் பணயக்கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர்.

இவர்களை விடுவிப்பதற்காக ஹக்கானி ஆயுதக்குழுவின் முக்கிய நபரான அனஸ் ஹக்கானி என்பவரும், மேலும் இரண்டு சிரேஷ்ட தளபதிகளும் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இந்தப் பரிமாற்றல் நடவடிக்கையானது ஆப்கான் அரசாங்கத்திற்கும், தலிபான்களுக்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு உதவி புரியுமென நம்பப்படுகின்றது.

Related Articles

Back to top button
image download