செய்திகள்

தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை.!

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை புதன்கிழமை கொழும்பு பெரியபள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. நாளை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நடைபெறவுள்ளதாக பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள் அதன் பிறைக்குழு அங்கத்தவர்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள், அதன் பிறைகுழு அதிகாரிகள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து தீர்மானம் எடுக்கவுள்ளனர்.

நாட்டில் எங்காவது தலைப்பிறை தென்பட்டால் 0112 432 110 அல்லது 0112 451 245 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்ற முஸ்லிம் மக்கள் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதுடன் ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடவுள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com