ஆன்மீகம்

தலைமன்னார்- அருள்மிகு ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் திருக்கோயில்

தலைமன்னார் நற்பதியில் கோயில் கொண்ட தேவி
மலைத்து நிற்போர் துயர் போக்கி அருளிடவே வருவாள்
அலைகடலின் கரையினிலே அமர்ந்தருளும் தேவி
தலைநிமிர்ந்து நாம் வாழ வழியமைத்துத்
தருவாள்..

வட இலங்கை மாநிலத்தில் குடிகொண்ட தேவி
உடனிருந்து காவல் செய்து காத்திடவே செய்வாள்
தென்னை, பனை சூழவர குடியிருக்கும் தேவி
தொல்லையில்லா வாழ்வுக்கு வழியமைத்துத் தருவாள்..

தேவி முத்துமாரியென்ற பெயர் கொண்ட தேவி
தேடிவந்து நலன்களையே நமக்களித்துச் செல்வாள்
தாயாகவிருந்து நம்மை அரவணைக்கும் தேவி
தளர்வில்லா மனதுடனே வாழவழி செய்வாள்..

சுற்றிவர கடல் சூழ வீற்றிருக்கும் தேவி
வெற்றியுடன் வாழவழி காட்டிடவே வருவாள்
அழகுதிரு வடிவுடைய எங்கள் அன்னை தேவி
தாழ்வில்லா வாழ்வுதனை வாழவழி தருவாள்..

நல்லவர்கள் நலன்பேணி அருளுகின்ற தேவி
நாட்டினிலே நல்லாட்சி பேணிடவே செய்வாள்
வல்லமை தந்து நம்மை வாழவைக்கும் தேவி
வழிதவறா நெறியில் நம்மை வழிநடத்தி விடுவாள்..

தலைமன்னார் துறைக்கரையில் எழுந்து நிற்கும் தேவி
தமிழர் நம் வாழ்வுக்கு உந்துதலே தருவாள்
அச்சநிலை போக்கிடவே அருள் செய்யும் தேவி
அரணாக இருந்தெமக்கு ஆறுதலைத் தருவாள்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button