செய்திகள்

தலைமன்னார் மேற்குப்பகுதியில் வனவளத்திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கைக்கு மக்கள் கண்டனம்

மன்னார் – தலைமன்னார் மேற்குப்பகுதியில் வனவளத்திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

மன்னார் – தலைமன்னார் மேற்குப்பகுதியில் வனவளத்திணைக்களத்தினர் இன்றைய தினம்(திங்கட்கிழமை) காணிகளை அளவிடுவதற்காக சென்றிருந்தனர்.

இதன்போது அங்கு ஒன்றுகூடிய பொதுமக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக காணி அளவிடும் பணிகளை கைவிட்டு அங்கிருந்து செல்ல வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து வனவளத்திணைக்களத்தினருக்கும், தலைமன்னார் பங்குத்தந்தை அருட்தந்தை மாக்கஸ் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலினைத் தொடர்ந்து வனவளத்திணைக்களத்தினர் காணி அளவீட்டு பணிகளை கைவிட்டு அங்கிருந்து சென்றுள்ளதாகவும் அருட்தந்தை மாக்கஸ் ஆதவன் செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.

Related Articles

Back to top button