ஆன்மீகம்செய்திகள்

தாக்குதலுக்கு இலக்காக கட்டுவாப்பிட்டிய தேவாலயம் மீள திறக்கப்பட்டது.

ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான நீர்கொழும்பு கட்டுவாபிடிய புனித செபஸ்தியன் தேவாலயம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று மாதங்களின் இந்த தேவாலயம் மீள திறக்கப்பட்டுள்ளது.

ஆயிரத்திற்கும் அதிகமானோர் இன்று முற்பகல் ஆராதனையில் கலந்துகொண்டதாக எமது விசேட செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் தேவாலயத்தை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தேவாலயத்தின் முன்வரிசை இருக்கைகள்,தாக்குதலில் காயமடைந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன.

கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் கட்டுவாபிடிய புனித செபஸ்தியார் தேவாலய காலை ஆராதனை 08.30 அளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதேவேளை, மட்டக்களப்பு சியோன் தேவாலத்தின் நன்றி ஆராதனை பிரதம போதகர் ரொஷான் தலைமையில் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் மண்டபத்தில் இந்த ஆராதனை நடைபெற்றுள்ளது.

தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான சியோன் தேவாலயத்தில் புனரமைப்புப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

இதனால், ஆராதனைகளுக்காக தேவாலயம் இன்னும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button