...
செய்திகள்

தாங்கி ஊர்தி உயர் மின்னழுத்த கம்பத்தில் மோதி தீப்பற்றி எரிந்தது

கொட்டாவ – அதுருகிரிய வீதியில் வார சந்தைக்கு அருகில் நேற்று (23) இரவு சீமெந்து ஏற்றிச் சென்ற தாங்கி ஊர்தியொன்று வீதியை விட்டு விலகி இரண்டு தடுப்பு சுவர்கள் மற்றும் உயர் மின்னழுத்தக் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

உயர் மின்னழுத்த கம்பத்தில் குறித்த வாகனம் மோதியதில், மின்கம்பம் மற்றும் மின்கம்பிகள் அவ்வாகனத்தின் முன்பகுதியில் விழுந்ததில் அப்பகுதி முற்றாக தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தீயை அணைக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

Yarlosai - அதிவேக நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த தாங்கி ஊர்தி (காணொளி)

அத்துடன், மின்சார சபை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து மின்கம்பங்கள் மற்றும் கம்பிகளை அகற்றியதையடுத்து,  வீதியை விட்டு விலகியிருந்த தாங்கி மற்றும் வாகனத்தின் முன்பகுதி கிரேன் உதவியுடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த விபத்தினால் குறித்த பிரதேசத்துக்கான மின்சார விநியோகம் தடைபட்டுள்ளதுடன் தொலைபேசி கட்டமைப்பும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தாங்கி ஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தக் காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen