செய்திகள்

தாஜீடின் – லசந்த கொலை தொடர்பான முழுமையற்ற அறிக்கை​யை வழங்க வேண்டாம்.

றக்பி வீரர் வசீம் தாஜீடின் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க உள்ளிட்ட  கொலை வழக்குகள் தொடர்பான முழுமையற்ற விசாரணை அறிக்கைகளை வழங்க வேண்டாம் என சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விசாரணை தொடர்பான அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபரால் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

றக்பி வீரர் வசீம் தாஜீடின் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க உள்ளிட்ட  கொலை வழக்குகள் தொடர்பான முழுமையான அறிக்கையை வெவ்வேறு கோப்புகளாக தயாரித்து இன்றைய நாளுக்கு முன்னர்  சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணி்ப்புரை விடுத்திருந்தார்.

றக்பி வீரர் வசீம் தாஜீடின் ஊகடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க , கீத் நோயார் 17 பணியாளர்கள் கொலை மற்றும் 11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட  கொலை வழக்குகளை துரிதப்படுத்துமாறு சட்ட மா அதிபரினால் கடந்த 15 ஆம் திகதி பதில் பொலி்ஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

Related Articles

Back to top button