செய்திகள்

தாதியர்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதியின் தீர்வு.!

அரச சேவைக்கான ஐக்கிய தாதியர் சங்கத்தின் 7 கோரிக்கைகளில் 05 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய 2 கோரிக்கைகளையும் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் போது நிறைவேற்றுவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

அரச சேவைக்கான ஐக்கிய தாதியர் சங்கத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது ஜனாதிபதியால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்பிரகாரம், தாதியர் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல், நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2017. 12. 07ஆம் திகதிய 32/2017ஆம் இலக்க சுற்றுநிரூபத்தின் ஊடாக இடைநிறுத்தப்பட்ட பணிக்குழாம் நிலையை மீண்டும் வழங்குதல், இடைநிறுத்தப்பட்டுள்ள வகுப்பு மூன்றிலிருந்து வகுப்பு இரண்டுக்குப் பதவி உயர்வை ஐந்தாண்டுகளிலும் மற்றும் வகுப்பு இரண்டிலிருந்து வகுப்பு ஒன்றுக்கு 7 ஆண்டுகளிலும் தரம் உயர்த்துதல், 20,000 ரூபா வருடாந்த சீருடைக் கொடுப்பனவை வழங்குதல், தற்போதைய 36 மணிநேர வேலை நேரத்தை வாரத்துக்கு ஐந்து நாட்கள் 30 நேரமாகக் கருதுவதை விசேட குழுவொன்றின் ஆய்வுக்கு உட்படுத்தல் ஆகிய ஐந்து விடயங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில், 10,000 ரூபா கொடுப்பனவு உட்பட்ட இரண்டு கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இந்த 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் கடந்த 2 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button