செய்திகள்

தாதியர் சங்கங்களின் போராட்டம் இன்றும் தொடர்கிறது.!

பதவி உயர்வு மற்றும் தாதிய கொடுப்பனவு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில் தாதியர் சங்கங்கள் நேற்று ஆரம்பித்த சுகயீன விடுமுறை போராட்டம் இன்றும் தொடர்கிறது.

அரச தாதி அதிகாரிகளின் சங்கம், அகில இலங்கை தாதியர் சங்கம், அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் என்பன இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், திடீர் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தாதியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Related Articles

Back to top button