செய்திகள்
தாய் மற்றும் குழந்தை சடலங்களாக மீட்பு -ஹபரகட பிரதேசத்தில் சம்பவம்
ஹபரகட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து தாய் மற்றும் குழந்தை ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
32 வயதுடைய குறித்த தாய் 10 மாதங்கள் ஆன ஆண் குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஹபரகட, இனிதும பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட சமகி மாவத்தை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவகம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று காலை 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளாதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளைஇ குறித்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து இனிதும பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.