செய்திகள்

தாழ்வுப்பாட்டு கடல் பகுதியில் 25 மீனவர்கள் கைது

 

மன்னார் தாழ்வுபாடு பிரதேசத்தை சேர்ந்த மக்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
யுத்தத்தினால் இரண்டு முறை இடப்பெயர்வை சந்தித்த இம் மக்களுக்கு இன்று வரை மாற்று தொழில் வாய்ப்புக்கள் எதுவுமே அரசாங்கத்தினால் செய்து தரப்படாத நிலையில் குறித்த தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். 04.12.2017 இன்று திங்கள்கிழமை காலை தமது அன்றாட கடற்தொழிலில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்து சுமார் 25 மீனவர்களையும் அவர்களுடைய மீன்பிடி உபகரணங்களையும் 5 படகுகளையும் கடற்படையினர் தாழ்வுபாடு கடல் பகுதியில் வைத்து காலை 11.00 மணியலவில் கைது செய்துள்ளனர.

கைது செய்யப்பட்ட 25 மீனவர்களையும் தாழ்வுபாடு கடற்கரை முகாமில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர் .
குறித்த தகவல்களை அறிந்த தாழ்வுபாட்டு கிராம மக்கள் தாழ்வுபாடு கடற்கரை முகாமை சுழந்து படகுகளை வீதி நடுவே நிறுத்தி கைது செய்த 25 மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறும் விடுவிக்காத பட்சத்தில் குறித்த தாழ்வூபாடு கடற்கரை முகாமைவிட்டு கலைந்து செல்ல போவதில்லை எனவூம் தெரிவித்ததை அடுத்து தாழ்வுபாட்டு பிரதேசம் முழுவதும் பதட்ட நிலமை தோற்றம் பெற்றது.
இதனை அடுத்து குறித்த பிரதேசத்துக்கு பொலிஸ்சார் உடனடியாக அழைக்கப்பட்டனர் அழைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தாழ்வுபாடு கிராம மக்களுக்கும் தாழ்வுபாட்டு கிராமத்தின் பங்குத்தந்தைக்கும் இடையில் சமரச பேச்சு வார்த்தை இடம் பெற்றது. மேற்படி கலந்துரையாடலின் பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாக்குறுதி வழங்கியதை அடுத்து கைது செய்யப்பட்ட 25 மீனவர்களையும் பொலிஸ் நிலையம் அழைத்து செல்ல மக்கள் அனுமதி அழித்தனர்.அதனை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
மன்னார் மாவட்டத்தில் ஏனைய பல பிரதேசங்களில் தடை செய்யப்பட்ட தொழில் இடம் பெறுகின்ற போது எங்கள் தாழ்வுபாட்டு பிரதேசத்தில் மாத்திரம் ஏன் இவ்வாறன கைது நடவடிக்கைகள் இடம் பொறுகின்றன என தாழ்வுபாட்டு பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

-(படம்)
-மன்னார் நிருபர்- ஜோசப் நயன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button