செய்திகள்

திடீரென தரையிரங்கிய விமானம் : காரணம் இதுவா.?

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து அபுதாபி நோக்கிப் பயணித்த, எடிஹெட் விமான சேவைக்குச் சொந்தமான, எ– 380 எயார் பஸ் விமானம் ஒன்று இன்று அதிகாலை தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.

அதிகாலை 4.28 மணியளவில் கட்டுநாயக்கவில் தரையிறங்கிய குறித்த விமானத்தில், பயணிகள் உள்ளிட்ட 455 அலுவலகர்கள் பயணித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமானநிலையத்தில் எரிபொருளை நிரப்பிய குறித்த விமானம் 6.11 மணியளவில், கட்டுநாயக்கவிலிருந்து, அபுதாபி நோக்கி பயணித்துள்ளது.

குறித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காகவும் விமானக் குழுவினர் ஓய்வெடுத்துக்கொள்வதற்காகவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com