...
செய்திகள்

திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவைக் காலம் நீடிப்பு

நாட்டில் நிலவும் கொவிட் -19 நிலவரத்தை கருத்திற் கொண்டு, திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவைக் காலத்தை நீடிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, நிரந்தர மற்றும் தற்காலிக திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவைக் காலம் டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் 70 வயதை நிறைவு செய்தவர்கள் மற்றும் மார்ச் 31 ஆம் திகதிக்குப் பின்னர் சேவை நீடிப்பைப் பெறாத பிரேதப் பரிசோதகர்கள் சேவை நீடிப்புகளுக்கு விண்ணப் பங்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை என நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பின்னர் திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவை நீடிப்பு குறித்து வழக்கமான நெறிமுறை பின்பற்றப்படும் எனவும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவர்களுக்கு இந்தச் சுற்றறிக்கை பொருந்தாது என்றும் நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen