செய்திகள்

திட்டமிடப்பட்டிருந்த சத்திர சிகிச்சைகள் இரத்து.

(ராகவ்)

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திட்டமிடப்பட்டிருந்த சத்திர சிகிச்சைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று நிலமை அதிகரித்துச் செல்வதை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சத்திர சிகிச்சைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் குமார விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

வௌிநோயாளர் பிரிவு, இருதய நோயாளர் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, சுவாசநோய் சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் வழமைபோன்று சேவைகள் இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.

கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படும் பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு பிரத்தியேகமாக இரண்டு விடுதிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்தார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com