விளையாட்டு

தினேஷ் பிரியந்தவுக்கு ஐந்து கோடி ரூபா பணப்பரிசு …

டோக்கியோவில் இடம்பெற்ற பராலிம்பிக் போட்டியில் உலக சாதனை படைத்து, வரலாற்றிலேயே முதல் தடவையாக இலங்கை சார்பாக பராலிம்பிக் தங்கப்பதக்கத்தை வென்றெடுத்த தினேஷ் பிரியந்தவுக்கு ஐந்து கோடி ரூபா பணப்பரிசை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நேற்று (01) தீர்மானித்துள்ளது.

அதன்படி, இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றிலே தனிப் போட்டி ஒன்றில் வென்ற ஒரு விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பணப் பரிசுத் தொகை இதுவாக அமைந்திருக்கும்.

அதேபோல், இந்த பராலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற சமித துலானுக்கு 2 கோடி ரூபாபணப் பரிசை வழங்கவும் விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

Related Articles

Back to top button
image download