செய்திகள்

திரிபோஷ, பாடசாலை உணவுத்திட்டத்தை மீண்டும் கொண்டுவர நடவடிக்கை!

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னணி மனிதாபிமான நிறுவனமான உலக உணவுத் திட்டம் இலங்கையின் உணவு மற்றும் ஊட்டச்சத்து அவசரநிலைமை தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனடிப்படையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கான திரிபோஷ மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான உணவுத் திட்டம் என்பவற்றை மீண்டும் செயல்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இலங்கையில் இவ்வாறான தேவையுள்ள 3 மில்லியன் பேருக்கு இத் திட்டத்தை டிசம்பர் வரை செயற்படுத்த ரூ. 21.6 பில்லியன்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக உணவுத் திட்டம் கொழும்பில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவு வவுச்சர்களை வழங்கும் திட்டத்தை கடந்த ஜூன் 16 திகதி ஆரம்பித்து வைத்தது. இதன்படி ஒருவருக்கு ரூ. 15,000 மதிப்புள்ள வவுச்சர் வழங்கப்படுகிறது .
நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்ச சத்துள்ள உணவை பெறும் பொருட்டு இத்தொகை கணக்கிடப்பட்டுள்ளது . மேலும் ரூ.15,000 என்பது அத்தொகையின் அரைவாசியாகும். இந்த வவுச்சர்களை அங்கிகரிக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகளில் கொடுத்து பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

Back to top button