...
செய்திகள்

திருகோணமலைநகர்- அருள்மிகு வில்லூன்றி கந்தசுவாமி திருக்கோயில் 

திருகோணமலை திருநகரில் கோயில் கொண்ட கந்தன்
திருவருளையெமக்களித்து வாழவைப்பான் என்றும் 
தொன்மைமிகு தமிழ் மண்ணில் வீற்றிருக்கும் வேலன் 
தோன்றாத் துணையாயிருந்து எமைக்காப்பான் என்றும் 
வில்லூன்றி கந்தசுவாமி என்ற நாமம் கொண்ட கந்தன் 
விருப்பமுடன் எமையணைத்து வாழவைப்பான் என்றும் 
பழம்பெருமை கொண்ட தமிழ் நிலத்தில் எழுந்தருளும் வேலன் 
பங்கமின்றி நாம் வாழ எமைக்காப்பான் என்றும்
கிழக்கிலங்கை வேல்தாங்கி அருள் பொழியும் கந்தன் 
உயர்நிலையைத் தந்தெம்மை வாழவைப்பான் என்றும் 
குளக்கோட்டன் பணிசெய்த நற்பதியிலுறை வேலன் 
குவலயத்தில் தலை தாழா நிலை யெமக்கருள்வான் என்றும் 
உயர்ந்த பெருங் கோபுரத்தை உடைய எங்கள் கந்தன் 
உண்மை நெறி பிறழாது வாழ வைப்பான் என்றும் 
வள்ளி தெய்வானை அன்னையைருடன் இருந்தருளும் வேலன் 
அச்சமில்லா நிம்மதியை எமக்களிப்பான் என்றும் 
கோணேசர் கோயில் கொண்ட  திருப்பதியிலுறை கந்தன் 
கோணலின்றி நேர்வழியில் வாழவைப்பான் என்றும் 
தமிழ்முழங்கும் பெருநிலத்தில் நின்றருளும் வேலன் 
தரணியிலே தமிழர் நிலைகாத்து எமக்கு அருள்வான் என்றும் 
நம்பி அடிபணிவோர் நலன் காக்கும் கந்தன் 
நம்பிக்கை எமக்களித்து வாழவைப்பான் என்றும் 
எதிர்காலம் ஏற்றமுற கை கொடுக்கும் வேலன் 
துணையாக இருந்தெமக்கு வாழ்வளிப்பான் என்றும். 
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர்.
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen