செய்திகள்

திருகோணமலைநகர்- அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயில்

 
திருகோணமலை நகரமர்ந்து திருவருளைத் தரும் எம் தாயே 
திடமாக உனை நம்பும் எங்களுக்கு அருளிடம்மா
துன்பங்கள் துடைத்தெறிந்து நிம்மதியைத் தருவதற்கு
துணையாகவிருந்தெமக்கு ஆறுதலைத் தாருமம்மா  
கோணேசர் பார்வைபட அமர்ந்திருக்கும் எம் தாயே 
கதி நீயென்றுன்னடி பற்றும் எங்களுக்கு அருளிடம்மா
பகை கொடுமை அண்டாது நிம்மதியைத் தருவதற்கு 
உடனிருந்தெமக்கு ஆறுதலைத் தாருமம்மா 
தமிழரசர் ஆண்ட திருநாட்டில் உறையும் எம் தாயே 
தாயாகவிருந்தெமது நலங்காத்து அருளிடம்மா
தீராத கொடுநோய்கள் பகைவராது தடுத்தெமக்கு நிம்மதியைத் தருவதற்கு 
கூடியிருந்தெமக்கு ஆறுதலைத் தாருமம்மா
ஆதரித்து அரவணைத்து அருளளிக்கும் எம் தாயே 
அறிவு தந்து ஆற்றல் தந்து எமையாண்டு அருளிடம்மா
திரண்டுவரும் துன்பங்களைச் சிதைத்து அழித்தெமக்கு நிம்மதியைத் தருவதற்கு 
நித்தமுமுடனிருந் தெமக்கு ஆறுதலைத் தாருமம்மா
உலக சக்திபீட மொன்றிலே கோயில் கொண்ட எம் தாயே 
உறவுகள் சிதையாது இணைந்து வாழ அருளிடம்மா
தோல்வியில்லா நிலை தந்தெமக்கு நிம்மதியைத் தருவதற்கு 
என்றுமுடனிருந்துந் தெமக்கு ஆறுதலைத் தாருமம்மா
அண்டிவரும் பக்தர்களின் குறைபோக்கும் எம் தாயே 
அச்சமின்றி நிம்மதியாய் வாழ்வதற்கு துணையை நீ அருளிடம்மா
தலைதாழா நிலை தந்து தலைநிமிர்ந்து நிம்மதியாய் வாழ்வதற்கு 
தாயே பத்திரகாளியம்மா உறுதுணையாய் இருந்திடம்மா.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button