செய்திகள்

திருகோணமலையில் இளைஞர் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை

திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகில் ஓடும் மோட்டார் சைக்கிளில் வைத்து இளைஞர் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞரே கொல்லப்பட்டுள்ளதாகவும் அவரது நண்பர் என கருதபப்டும் அதே வயதுடைய சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். காதல் விவகாரத்தை மையப்படுத்தி இக்கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திருகோனமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள வீதியில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் வருகை தருவதும் ஒரு கட்டத்தில் அந்த மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த இளைஞர் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபரின் கழுத்தை கத்தியால் அறுப்பதும் அருகிலிருந்த சி.சி.ரி.வி. கமெராவில் பதிவாகியிருந்தது.

இவ்வாறு கழுத்து அறுக்கப்பட்ட இளைஞர் ஒருவாறு போராடி நண்பனிடமிருந்து தப்பி பிரதான வீதியால் ஓடியுள்ள நிலையில் கடற்படை முகாமுக்கு அருகில் மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

பின்னர் கொலை செய்ததாகக் கூறப்படும் 20 வயதான இளைஞர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போதே காதல் பிரச்சினையை மையப்படுத்தி இக்கொலை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. சடலம் திருகோணமலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com