செய்திகள்

திருகோணமலை- அருள்மிகு திருக்கோணேஸ்வரம் திருக்கோயில்..

 
கோணேஸ்வரப் பதியமர்ந்த பேரருளே சிவனே
முத்தமிழை எமக்களித்த திருவருளே ஐயா
அன்னை மாதுமையுடன் இருந்தருளும் சிவனே
வெற்றி கொண்ட வாழ்வதனைத் தந்திடுவாய் ஐயா 
திருமலையில் கோயில் கொண்ட திருவொளியே சிவனே
உன் திருவருளை நாடுகின்றோம் அருள் தருவாய் ஐயா 
தேடிவந்து உன்பாதம் தொழுகின்றோம் சிவனே
தெளிவான வழியமைத்து அருளிடுவாய் ஐயா
கிழக்கிலங்கை அமர்ந்தருளும் உத்தமனே சிவனே
கிலேசமில்லா நிம்மதியை எமக்களிப்பாய் ஐயா 
இராவணனின் பூசையிலே பெருமை கொண்ட சிவனே
இரவுபகல் உடனிருந்து காத்தருள்வாய் ஐயா
தேரேறிப் பவனி வரும் தூயவனே சிவனே
தேசமெல்லாம் உன் கருணை நிலைக்க வேண்டும் ஐயா
பேதலித்து நிற்பவர்க்கு திசை காட்டும் சிவனே
பேதமைகள் போக்கியெம்மை வாழவைப்பாய் ஐயா
சம்பந்தரால் பாடல் பெற்ற தலைமகனே சிவனே
சத்தியம் நிலைத்திடவே உறுதி செய்வாய் ஐயா
தமிழரசர் ஆட்சியிலே சிறப்புற்ற சிவனே
சீர்மையுடன் தமிழர் வாழ வழி வேண்டும் ஐயா
அறம் காத்து அன்பு செய்யும் அற்புதனே சிவனே
ஆற்றல் கொண்டு முன்செல்ல உடன் வருவாய் ஐயா
கேட்டவரம் தவறாமல் கொடுக்கின்ற சிவனே
கோணமாமலை எமதுரிமை என உணர்த்து ஐயா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen