செய்திகள்

திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று சர்ச்சை தொடர்பில் கன்னியா நிலவரம் நீதிமன்ற இடைகால தடையுத்தரவு நீடிப்பு.

திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று சர்ச்சை தொடர்பில் நீதிமன்றம் விடுத்திருந்த இடைகால தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையின இந்த வழக்கு மீதான விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைகால தடையுத்தரவு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வரை  நீடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினத்தில் கன்னியா வெந்நீரூற்று வழக்கு விசாரணைகள் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வரை இடம்பெற்றன. 

திருகோணமலை சட்டத்தரணி பிரஷாந்தினி உதயகுமார் கடந்த ஜுலை மாதம் 19ஆம் திகதி இந்த வழக்கை பதிவு செய்திருந்தார்.
மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த வழக்குக்காக முன்னிலையாகியிருந்தார்.

கடந்த காலங்களில் கன்னியா வெந்நீரூற்று பகுதியிலுள்ள புராதண பிள்ளையார் ஆலயத்தை இடித்து, அந்த இடத்தில் பௌத்த விகாரையை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதற்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

Related Articles

Back to top button