...
செய்திகள்

திருகோணமலை- சம்பூர் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் திருக்கோயில் 

கிழக்கிலங்கை சம்பூரில் கோயில் கொண்ட அம்பாள் 
கிலேசமின்றி வாழ்வதற்கு உறுதி செய்து தருவாள்
மகிழ்ச்சி பொங்க வளமுடனே நாம் வாழ்வதற்கு 
ஏற்றவழி செய்து நமக்குறுதியையும் தருவாள்
வளங் கொண்ட திருமலையில் நின்றருளும் அம்பாள் 
வாழ்வில் என்றும் மகிழ்ச்சியையே எங்களுக்குத் தருவாள்
வஞ்சனைகள், சஞ்சலங்களின்றி நாம் வாழ்வதற்கு 
துவளாத மனவலிமை தந்து அருள் தருவாள்
திடங்கொண்ட தமிழ் மண்ணில் வீற்றிருக்கும் அம்பாள் 
தடங்கல்களைத் தகர்த்தெறிந்து வழியமைத்துத் தருவாள்
நலமுடனே நல்லவர்கள் நிம்மதியாய் வாழ்வதற்கு 
உற்ற துணையாயிருந்து உறுதியையும் தருவாள்
வெற்றிகளை வழங்கி நலம் வழங்குகின்ற அம்பாள் 
வீரமிகு வலிமை கொண்ட வாழ்க்கையையும் தருவாள்
தோல்வியின்றி துடிப்புடனே உயர்வு பெற்று வாழ்வதற்கு 
தோன்றாத் துணையிருந்து உதவிகளும் தருவாள்
பாவங்கள் போக்கி பலமளிக்கும் அம்பாள் 
பரிதவிக்கும் நிலையகற்றி எழுச்சியையும் தருவாள்
சொந்த மண்ணில் நிம்மதியாய், நிரந்தரமாய் வாழ்வதற்கு 
உரிய வழியெமக்கு விரைவாகத் தான் தருவாள்
தாயாக வீற்றிருந்து அரவணைக்கும் பத்திரகாளி அம்பாள் 
தரணியிலே நிம்மதியாய் நாம் வாழ உறுதுணையைத் தருவாள்
போட்டி பொறாமைகள் களைந்து நாம் ஒன்றுபட்டு வாழ்வதற்கு 
அருள் தருவாள், வழி திறப்பாள் சம்பூருறை பத்திரகாளி அம்பாள். 
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen