செய்திகள்

திருகோணமலை- சல்லி- அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்….

 
ஓங்கார ஒலியெழுப்பி ஓடி வருகின்றாள் அன்னை 
உலகத்தையே காவல் செய்யப் பாடி வருகின்றாள்
ஆடிவருகின்றாள் அன்னை அசைந்தாடி வருகின்றாள்
நம் அல்லல்களை ஓட்டிவிட நாடிவருகின்றாள்
நாடிச் சென்று அவளடியைப் பற்றிடுவோமே
நல்லருளைப் பெற்றிடவே விரைந்திடுவோமே
கூடியாடிப் பாடிச் சென்று குதூகலிப்போமே
அன்னை குவலயத்தைக் காத்திடவே வந்துவிட்டாளே
துன்பமில்லை, துயரமில்லையென்று சொல்லுவோமே
துணையிருக்க அன்னையவள் வந்துவிட்டாளே
இன்பம் நிறை வாழ்வையினி வாழ்ந்திடுவோமே
இனியெமக்கு அன்னையன்றோ துணையிருக்கின்றாள்
ஆர்ப்பரிக்கும் கடல் மருங்கில் சல்லி கிராமத்தில்
ஆறுதலை அளிக்க அன்னை எழுந்துவிட்டாளே
கொலை வெறியும், கொடு பகையும் அன்னை முன்னாலே
செயலிழந்து நிற்பதை நாம் கண்டிடுவோமே
கிழக்கிலங்கை திருமலையின் கோயில் கொண்டவளே
அன்னை நம் தமிழ்க் குலத்தைக் காத்தருள துணையிருப்பாளே
வீறுகொண்டு, எழுச்சி பெற்று முன்செல்வோமே
என்றும் நமக்கருள் வழங்கி உறுதுணையாய் அன்னை இருப்பாளே
வந்தனை செய்தடி பணிந்து தொழுது நிற்போமே
ஆறுதலைத் தந்தெம்மை அணைத்திடுவாளே சல்லி முத்துமாரியம்மனே
வெந்து துடித்தரற்றுகின்ற வாழ்வு ஏனிங்கே- அன்னை 
மீட்சி பெற வழியெமக்குக் காட்டிடும் போது. 
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen