...
செய்திகள்

திருகோணமலை- தம்பலகாமம் அருள்மிகு ஆதிகோணநாயகர் திருக்கோயில் ..

திருகோணமலைத் திருமண்ணில் அமர்ந்தருளும் சிவனே
வளம் நிறைந்த தமிழ் நிலத்திருந்தெம்மை ஆள்பவரே
தடம் பதித்த தமிழர் வரலாறு கொண்டவுன் மண்ணில் 
தலைநிமிர்ந்து நாம்மீள வாழவேண்டும் சிவனே
ஹம்ச ஹமனாம்பிகா தேவி அன்னையுடன் உறையும் சிவனே
ஆற்றல் தந்து எழுச்சி பெற ஏற்ற அருள் செய்பவரே
வயல் சூழ்ந்த வளநிலத்தில் கோயில் கொண்ட ஐயா
குறைகளைந்து நம் நிலையுயரவுன் துணை வேண்டும் சிவனே
ஆதிகோண நாயகர் என்ற திருப்பெயரைக் கொண்ட சிவனே
ஆறுதலை தந்தெமக்கு அருள் வழங்கி நிற்பவரே
பகையொழிந்து, பயம்நீங்கி, நிம்மதியாய் வாழவேண்டும் ஐயா
உன்பதியில் எம்மிருப்பை உறுதி செய்வாய் சிவனே
தமிழ் மணக்கும் திருமலையின் தம்பலகாமத்தில் நின்றுறையும் சிவனே
அதர்மத்தை வேரறுத்து அருளாட்சி செய்பவரே
சொந்த மண்ணில் அச்சமின்றி நிம்மதியாய் வாழ வழிதருவாய் ஐயா
 ஒளிமிகுந்த எதிர்காலம் எமக்கருள்வாய் சிவனே
ஐந்து தளக் கோபுரத்தை உடையவரே சிவனே
ஐக்கியமாய் நாம் வாழ அருள் தரவே வருவாய்
கேட்டவரம் கொடுத்தருளும் கோணநாத இறைவா
இருண்ட நிலை அற்ற வாழ்வை நாம் அடையவேண்டும் சிவனே
யாழ்ப்பாணத் தமிழரசில் சிறப்புற்ற சிவனே
பல்லவரும், சோழரும், பாண்டியரும் உன்னருளைப் பெற்றார்
நீர்வளமும், நிலவளமும் கொண்ட அழகுமிகு நிலத்தில் 
இருந்தருளும் நீயெமக்கு வளவாழ்வைத் தந்திடய்யா சிவனே.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen