...
செய்திகள்

திருகோணமலை நகர் அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் 

சிவனாரின் திருமகனே உமையாளின் இளமகனே
திருமலை நகர் கோயில் கொண்ட உத்தமனே
எம்மிதயக் குமுறல்களை அகற்றிவிட்டு
நிம்மதியை நாம் பெறவே வழிசெய்ய வேண்டுமய்யா
சரவணப் பொய்கை அருகு கொண்டு அமர்ந்தவனே
முத்துக்குமாரசுவாமி என்ற திருப்பெயரை உடையவனே
வைகாசித் திங்களில் திருவிழா கொள்பவனே
ஐயா குமரா காப்பளிக்க வந்திடய்யா
குழந்தைக் கடவுளென்று கும்பிட்டு நிற்கின்றோம்
வேலேந்தி வந்து வினையறுத்த வரலாறு
சொல்லியரற்றும் அடியார் நிலை அறியாயோ
ஐயா முத்துக்குமரா நின்விழியைத் திறந்திடய்யா
சேவற் கொடி தாங்கி மயிலேறி வருவோனே
பாவம் பொடிபடவே படையினை நீ தகர்த்திடுவாய்
ஏற்றமுடன் உன்னடியார் நல்லருளைப் பெற்றிடவே
ஆறறிவு தானிருந்தும் அறிவிழந்து அல்லலுறும்
சீரற்ற மனது கொண்ட சிறியோரைத் திருத்திவிடு
பார் போற்றும் உந்தன் பழையகதை தொடரட்டும்
வேல்தாங்கி எழுந்தருள்வாய் நல்லருளை வழங்கிடுவாய்
கந்தனென்றும், முருகனென்றும் காக்கும் கடவுளென்றும்
நின்னடியைத் தொழுது நிற்கும் எமக்கு நீ துணையன்றோ
எம்மிதயம் நிறைந்திடுவாய் எமக்கு அருள் தந்திடுவாய்
உன்பாதம் சரணடைந்தோம் நீயே துணையய்யா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen