செய்திகள்

திருகோணமலை- வெருகல் அருள்மிகு சித்திரவேலாயுதசுவாமி திருக்கோயில்..

கிழக்கிலங்கை கரையினிலே அமர்ந்திட்ட வேலா
மனக்கவலை போக்கிடவே வந்திடுவாய் ஐயா
வெருகலம்பதியில் கோயில் கொண்ட வேலா
வெற்றி பெற்று வாழவழி தந்திடுவாய் ஐயா
திருகோணமலை மாநிலத்திலிருந்தருளும் வேலா
அருகிருந்து ஆறுதலைத் தந்திடுவாய் ஐயா
மகாவலி கங்கைக் கரையமர்ந்த வேலா
மகிழ்ச்சியுடன் நாம்வாழ உதவிடுவாய் ஐயா
வயல் சூழ குடிகொண்ட வேலா
எம் தமிழர் உயர்வுபெற அருளிடுவாய் ஐயா
வளங்கொண்ட நன்னிலத்தில் நிலைபெற்ற வேலா
வற்றாத நலன்களையே தந்திடுவாய் ஐயா
திருமலையின் எல்லையிலே வீற்றிருக்கும் வேலா
மகிழ்ச்சி பொங்கும் வாழ்வுக்கு வழி செய்வாய் ஐயா
உயர்ந்த பெருங் கோபுரத்தைக் கொண்டவனே வேலா
உள்ளங்களில் நிம்மதியை நிறைத்திடுவாய் ஐயா
வேலேந்தி வினையறுக்க வெளிப்பட்ட வேலா
வேற்றுமைகள் களைந்தெம்மை வாழவிடு ஐயா
ஒன்றுபட்டு தமிழர் நிலை உயர வேண்டும் ஐயா 
உறுதுணையாயிருந்து வழி காட்டிடுவாய் ஐயா
வெற்றிக்கு வழிகாட்ட எழுந்தருளும் வேலா
வேதனைகளற்ற நிலை தந்திடுவாய் ஐயா
வரலாற்றுப் பெருமைமிகு கோயில் கொண்ட வேலா
அரவணைத்து வழி நடத்த வந்திடுவாய் ஐயா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button