செய்திகள்

திருக்கேதீச்சர வளைவு விவகாரம் – மன்னார் மறைமாவட்டம் எச்சரிக்கை

மன்னார் திருக்கேதீச்சர வளைவு தொடர்பான வழக்கில் எம்.ஏ.சுமந்திரன் ஒரு தரப்பினர் சார்பாக ஆஜராகியுள்ளமையானது பக்கச்சார்பானது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமயோசிதமற்ற முடிவுகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்துவதால் பிற வழிகள் குறித்து ஆலோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம் என மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழுவின் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழுவின் இயக்குநர் அருட்பணி ச.எமிலியான்ஸ் பிள்ளை அடிகளார் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download