மலையகம்

திருமண நிகழ்விற்கு சென்று வீடு திரும்பிய நபர்களுக்கு நடந்த கதி

ஹட்டன் – மல்லியப்பு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து மல்லியப்பு பகுதியில் நேற்று முன் தினம் மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரைிழந்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த பகுதியில் பொறுத்தபட்டிருந்த சீ.சீ.டிவி.கேமராவில் விபத்து டிதாடர்பான காட்சி ஒன்று பதிவாகியிருந்ததாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி கொழும்பு மட்டகுளி பகுதியை சேர்ந்த கந்தசாமி அமிலசேகர் (41வயது) , தலவாகலை டயகம பகுதியை சேர்ந்த தங்கமுத்து மோகன் என்பவர்களே உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இருவரும் நேற்றுமுன் தினம் மஸ்கெலியா பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போதே விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவர்களின் பிரதே பரிசோதனை நாவலபிட்டி பொது வைத்தியசாலையில் இடம்பெற்று இருவரினது சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button