செய்திகள்

திருமண வைபவத்தில் கலந்துக் கொண்ட 136 பேருக்கு கொரோனா.

குருணாகலை அம்பன்பொல பகுதியில் இடம்பெற்ற திருமண வைபத்தில் கலந்து கொண்ட 250
க்கும் அதிகமானோரில் 136 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த கொவிட் கொத்தணியில் வைரஸ் வேகமாக பரவுவதாகவும் மற்றும் நோய்
அறிகுறிகள் அதிகமாக தென்படுவதால் இது புதிய வகை கொரொனா வைரஸாக இருக்கக்கூடும்
எனவும் சுகாதார பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி அம்பன்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண
வைபத்தில் கலந்து கொண்ட திருமண தம்பதியினர் உள்ளிட்ட 136 பேருக்கு இவ்வாறு
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த திருமண வைபவத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி
அத்தனகல்லை பிரதேசத்தில் இடம்பெற்றது.

அதன்படி, குறித்த இரண்டு நாட்களிலும் மொத்தமாக 260 பேர் திருமண வைபவத்தில்
கலந்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், மேலும் 100 ற்கும் அதிகமானோரின் பிசிஆர் பரிசோதனை முடிவுகள்
கிடைக்கப்பெறவுள்ள நிலையில் தற்போது இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களுடன்
நெருங்கிப் பழகிய சுமார் 450 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button