உலகம்சினிமாசெய்திகள்

திரையுலக ஜாம்பவான் திலீப்குமார் காலமானார்.!

திரையுலக ஜாம்பவான் திலீப்குமார் தனது 98வது வயதில் காலமானார். இவர் 1944 இல் சினிமாவில் அறிமுகமாகி தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 30ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார், இன்று காலை காலமானார். திலீப் குமாரின் மறைவு பொலிவூட் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திலீப் குமார், இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1994ல் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button