செய்திகள்

திவுலப்பிட்டியவில் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம்!

‘அடக்குமுறைக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம், நாட்டை அழிக்கும் மக்களை ஒடுக்கும் அரசாங்கத்தை விரட்டுவோம்’ எனும் கருப்பொருளில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில், ஆர்ப்பாட்டமொன்று திவுலபிட்டிய மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக இன்று (21) இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த நாடு தழுவிய போராட்டங்களின் மற்றொரு போராட்டமாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Related Articles

Back to top button