மலையகம்

தீபாளி தினத்தன்று நோட்டன் பகுதியில் நடந்த சோகம்

நோட்டன் – தெபட்டன் தோட்டபகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் கத்தி கூத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று தீபாளி தினத்தன்று இடம்பெற்றுள்ளதாக நோட்டன் பிரீஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த தோட்டத்தில் உள்ள லயன் குடியிருப்பில் இருந்த ஒருவரும், கத்தி கூத்தில் பலியாகிய நபரும் மது அருந்தி கொண்டிருந்த வேலை இருவருக்கும் இடையில் வேலையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் மோதலாக மாறியயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக நோட்டன் பிரீஜ்பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவத்தில் 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சன்முகம் விஸ்வநாதன் என்பரே பலியாகியுள்ளார்.

இதேவேளை சந்தேகநபர் நோட்டன் பிரீஜ் பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதுடன், இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோட்டன் பிரீஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com