...
செய்திகள்

தீபாவளிக்கு மறுநாள் சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை!

– ரூபன் பெருமாளின் வேண்டுகோளுக்கிணங்க செந்தில் தொண்டமான் நடவடிக்கை-

எதிர்வரும் 4ஆம் திகதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதன் காரணமாக வெள்ளிக்கிழமை சப்ரகமுவ மாகாணத்தில்  உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும்  மறுநாள் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்க வேண்டுமென அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் ரூபன் பெருமாளிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.


இந்த கோரிக்கையின் பிரகாரம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சப்ரகமுவ மாகாணத்தில்  உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்க செந்தில் தொண்டமான் நடவடிக்கையெடுத்துள்ளார். தமது வேண்டுகோளை நிறைவேற்றிய சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவுக்கும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானுக்கும்  நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ரூபன் பெருமாள் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
-(அவிசாவளை நிருபர்- ரா.கமல்)

Related Articles

Back to top button


Thubinail image
Screen