தீபாவளி தினத்தன்று வெளியே சென்றவருக்கு நேர்ந்த கதி
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயின்ஸ்பெரி கீழ்பிரிவில் உள்ள கிளை ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீபாவளி தினத்தன்று நேற்று வெளியே சென்ற இவர் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் ஆற்றில் ஒருவரின் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளதுடன், நீதவான் அவ்விடத்திற்கு சென்று விசாரணைகள் மேற்கொண்டுள்ளார்..
உயிரிழந்தவர் குயின்ஸ்பெரி தோட்டத்தை சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான நடேசன் அரிகிருஷ்ணசாமி என அவரின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.