மலையகம்
தீபாவளி பண்டிகைக்கு முன்னர் அடிப்படை வேதனத்தை அதிகரித்து தருமாறு வேண்டுகோள்
அடிப்படை வேதனத்தை 1000ரூபாவாக அதிகரிக்க கோரி மஸ்கெலியா மற்றும் நோர்வுட் பிரதேசத்தின் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நோர்வுட் பிரதேசத்தின் சில தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஹட்டன் பொகவந்தாவை வீதியின் அயர்பீ தோட்ட பிரதேசத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், மஸ்கெலியா பிரதேசத்தின் சில தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மஸ்கெலியா நல்லத்தண்ணி வீதியின் மஸ்கெலியா எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் டயர்களை எரித்து எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது, எதிர்வரும் 6ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகைக்கு முன்னர் அடிப்படை வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரித்து நிலுவை வேதனத்துடன் பெற்றுத்தருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.