சினிமா

தீபாவளி, பொங்கல் ரேசில் களமிறங்கும் விஷால் படங்கள்

துப்பறிவாளன்’ படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் உருவாகி வரும் படங்கள் வருகிற தீபாவளி மற்றும் பொங்கல் தினங்களில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் காரணமாக விஷால் நடிப்பில் உருவாகி வந்த படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.  இந்நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய `துப்பறிவாளன்’ வெளியாகி தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளத்திலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில், `துப்பறிவாளன்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கான `டிடெக்டிவ்’ (Detective) வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது.

அதேநாளில் மோகன்லால் – விஷால் – ஹன்சிகா நடிப்பில் மலையாளத்தில் உருவாகி இருக்கும் `வில்லன்’ படமும் திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் உருவாகிவரும் த்ரில்லர் படமான  `இரும்புதிரை’ தைப்பொங்கல் விருந்தாக வருகிற ஜனவரி 12-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வின்சென்ட் அசோகன், கோபி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com