சமூகம்

தீபாவளி முன்னிட்டு மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை வழங்குமாறு கோரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 5 மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் பொது செயலாளர் சங்கர் மணிவண்ணன் விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

மத்திய மாகாணத்தில் அதிகமானோர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதுடன் அன்றைய தினத்தில் மக்கள் நெரிசல் அதிகம் இருப்பதால் மாணவர்கள பெரும் சிரமத்தை எதிர்நோக்குவார்கள்.

எனவே இதனை கருத்தில் கொண்டு விஷேட விடுமுறை வழங்குமாறு மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் உதவி செயலாளர் மற்றும் மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button