உலகம்செய்திகள்

தீயாய் கொளுத்தும் வெயில் : 486 பேர் பலி.!

உலகின் மிகவும் குளிரான நாடுகளில் ஒன்றான கனடாவில் தற்போது வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் பதிவாகியுள்ளது. அங்கு, வெப்ப அலையின் தாக்கத்தினால் கடந்த ஐந்து நாட்களில் 486 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் மாத்திரம் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், வழமையாக பதிவாகும் உயிரிழப்புகளை விட இது 195 வீத அதிகரிப்பு என கூறப்பட்டுள்ளது.

கடும் வெப்பத்தை அடுத்து ஏற்பட்ட காட்டுத்தீயினால் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவில் உள்ள லிட்டோ நகரின் வெப்பநிலை 49 பாகை செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. குறித்த பிரதேசத்தில் 90 வீதத்திற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு காட்டுத் தீயினால் முழுமையாக எரிந்துள்ளன. 15 நிமிடங்கள் கொண்ட குறுகிய நேரத்தில் இந்த காட்டுத்தீ பரவியதனால் லிட்டோ பிரதேசத்ததிலுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நெடுஞ்சாலைகளிலுள்ள தார் கடும் வெப்பம் காரணமாக உருகும் நிலை ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே அமெரிக்காவின் வாஷிங்டன், ஒரேகன் மாநிலங்களிலும் கடும் வெப்பத்தினால் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்தியாவின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலையின் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து வரும் வெப்பக்காற்றின் தாக்கம் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, வடக்கு ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் வடமேற்கு மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்கள் முடிந்தவரை வெளியில் வருவதை தவிர்க்கவும், குளிர்சாதன அறைகளில் இருக்கவும், அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சீரற்றகாலநிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் அயலவர்கள் மற்றும் முதியவர்கள் குறித்து கூடிய அவதானத்துடன் இருக்குமாறு அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் பொதுமக்களை கேட்டுள்ளனர்.

Related Articles

Back to top button