மலையகம்
தீயில் கருகிய முச்சக்கரவண்டி…?
கம்பளை நாவலப்பிட்டி பிரதான வீதியில் 16.05.2018 அன்று காலை சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று கம்பளை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கருகில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியிலிருந்து அட்டன் நோக்கி பயணம் சென்று கொண்டிருந்த வேளையில் முச்சக்கரவண்டியில் தீடீரென தீப்பிடிக்க ஆரம்பித்தவுடன் ஓட்டுனரோடு ,பயணித்த சிறு குழந்தை உட்பட 5 பேர் முச்சக்கரவண்டியை விட்டு பாய்ந்துள்ளமையால் அவர்கள் அணைவரும் எவ்வித தீக்காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பற்றி எரிந்த குறித்த முச்சக்கரவண்டியின் தீயை அயலிலுள்ளவர்கள் அணைக்க முயற்சித்தும் அது முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கம்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.