செய்திகள்

துமிந்த சில்வா விடுதலை அமெரிக்கா கடும் கண்டனம்

கொலை குற்றவாளியாக இனங்காணப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரெப்லிட்ஸ் அம்மையார் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

‘தமிழ் கைதிகளின் ஆரம்ப விடுதலையை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் 2018 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் உறுதிசெய்த தீர்ப்புக்கெதிராக, இப்போது துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

அரசாங்கத்தின் பொறுப்புணர்வு மற்றும் நீதிக்கான சம அணுகல் ஆகியவை ஐ.நா. கோட்பாடுகளுக்கு அடிப்படையானவையாகும்’ என அவர் தனது, ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button