உலகம்

துருக்கியும் ரஷ்யாவும் புதிய உடன்படிக்கையில் ..

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் இணைந்த இராணுவ திட்டத்தை முன்னெடுப்பதற்கு ரஷ்யாவும் துருக்கியும் இணங்கியுள்ளன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்துவான் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன்படி சிரியாவின் வடகிழக்கு பகுதியில் ரஷ்ய – துருக்கி இணைந்த இராணுவப் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த பகுதியிலிருந்து குர்திஷ் கிளர்ச்சிப்படையினரை வௌியேற்றும் முனைப்புடன் கடந்த மாதம் துருக்கியால் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
image download