...
செய்திகள்

துறைமுகத்திலுள்ள கொள்கலன்கள் தொடர்பில் விசாரணை செய்ய மேலதிக செயலாளர் நியமனம்!

கொழும்பு துறைமுகத்திலுள்ள உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, உப்பு உள்ளிட்ட இறக்குமதி செய்யப்பட்ட 1000 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விடுவிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் உடனடியாக விசாரணையை முன்னெடுக்க வர்த்தக அமைச்சு மேலதிக செயலாளரை நியமித்துள்ளது.
அமைச்சின் உள்நாட்டு வர்த்தகத்திற்கு பொறுப்பான மேலதிக செயலாளர் ஒருவர் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளரான பத்ராணி ஜயவர்தன தெரிவித்தார்.
துறைமுகத்திலிருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் கொள்கலன்களை விடுவிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் செப்டெம்பர் மாதம் முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த செயலாளர், 1000 கொள்கலன்கள் தேக்கிவைக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கிறது எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கொள்கலன்களை விடுவிக்க தடை ஏற்பட்டால், உடனடியாக கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான டொலர்களை வழங்குமாறு இலங்கை மத்திய வங்கிக்கு அறிவிக்கப்படும்.
அத்தியாவசியப் பொருட்களின் கொள்கலன்கள் தொடர்ந்து நாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. செப்டம்பர் 2021 இல், பிரதமர் மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் ஆதரவின் கீழ் வாழ்க்கைச் செலவுக் குழு கூடி, அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான பரிந்துரைகளை கோரியது.
இதற்கமைய , வர்த்தக அமைச்சு மத்திய வங்கிக்கு பரிந்துரைகளை சமர்ப்பித்தது.
துறைமுகம் மற்றும் இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பார்கள் என்றும் அதன் பின்னர் அது தொடர்பில் அமைச்சுக்கு தெரிவிப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen