செய்திகள்

தூர இடங்களுக்கான 12 ரயில் சேவைகள் மீள ஆரம்பம் ..

கொரோனா தொற்றினால் இடைநிறுத்தப்பட்டிருந்த தூர இடங்களுக்கான 12 ரயில் சேவைகள், இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக தூர பிரதேசங்களுக்கான ரயில் பயணங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கல்கிஸ்ஸை முதல் காங்கேசன்துறைக்கான ரயில் சேவை, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை சேவையில் ஈடுபடும் உத்தரதேவி ரயில் , கொழும்பு மற்றும் பதுளைக்கிடையிலான பொடிமெனிக்கே ரயில் சேவை, கொழும்பு கோட்டை முதல் கண்டி வரையான ரயில் சேவை , மருதானை முதல் பெலிஅத்த வரையான ரயில் சேவை ,மாத்தறை கொழும்புக்கிடையிலான ரயில் சேவைகளே இவ்வாறு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் நாளாந்த போக்குவரத்தில் ஈடுபடும் ரயில்களின் சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com