தெனியாயவில் 2 வயது குழந்தை உள்ளிட்ட இருவர் பலி!
தெனியாய – கிரிவெல்தொல, ஹிங்குரெஹேன பகுதியில் குளவி தாக்கியதில் குழந்தை ஒன்றும் பாட்டி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
வீட்டின் கூரையில் இருந்த குளவிக்கூடு கலைந்த சந்தர்ப்பத்தில் குழந்தையின் பெற்றோர்கள் வீட்டில் இருக்கவில்லை எனவும் குழந்தையின் பாட்டியும் குழந்தையும் மட்டுமே வீட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குளவி தாக்குதலில் ஹிங்குரெஹேன பகுதியை சேர்ந்த இந்தூஷ காரிந்த (2 வயது) என்ற குழந்தையும், 68 வயதான கருணாவதீ வன்னியாரச்சி என்ற பாட்டியுமே உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரையும் குளவி தாக்குவதை அவதானித்த அயலவர்கள் மட்டும் உறவினர்கள் அவர்களை மீட்டு தெனியாய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே குழந்தை உயிரிழந்திருந்ததாகவும் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது பாட்டி உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை தெனியாய வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பில் தெனியாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
This web site is my inspiration , really good design and perfect content material.