செய்திகள்

தெனுவர மெனிக்கே இன்று முதல் ……

தெனுவர மெனிக்கே எனப்படும் நகரங்களுக்கிடையிலான புகையிரத சேவை இன்று முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த புகையிரதம் கொழும்பு கோட்டையில் இருந்து இன்று காலை 6.45 மணிக்கு தனது பயணத்தை தொடங்கியது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இந்த ரயில் மலையக ரயில் சேவைக்காக தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். மலையக ரயில் சேவையில் இவ்வாறான ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நிமல் சிறிபால டி சில்வா திட்டமிட்டார்.

அவர் போக்குரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக பணியாற்றியமையால் அவரையும் இந்த நிகழ்விற்றகாக அழைத்தோம்.

ரயில் திணைக்களத்தில் பாரிய பிரச்சினைகள் இருந்தன. மலையக ரயில் பாதைக்கு தேவையான ரயில் எஞ்சின் மற்றும் பயணிகள் பெட்டிகள் தொடர்பிலேயே இந்த பிரச்சினைகள் காணப்பட்டன.

இன்று இந்த பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு கண்டு வருகின்றோம் என அமைச்சர் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றுகையில் பதுளை பிரதேசம் இன்று சுற்றுலாத்துறையில் மிகவும் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்றது.

இதற்கு காரணம் எல்ல,அப்புத்தளை, பண்டாரவைள ஆகிய பிரதேசங்களாகும். இதன் காரணமாக விசேடமாக வருமானத்தை அதிகரிப்பதற்கான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும், பதுளைக்கு செல்லும் மக்களுக்கு வசதியான போக்குவரத்து சேவையை மேற்கொள்வதற்கு இந்த ரயில் சேவை மிகவும் உதவும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சேவையில் ரயில்வே திணைக்களம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ்-14 ரக புதிய பயணிகள் பெட்டிகளை இணைத்துள்ளது.

இந்த ரயிலின் பயண அட்டவணை

கொழும்பு கோட்டை – காலை 6.45 மணிக்கு புறப்பட்டு

பதுளையை பிற்பகல் 3.27 க்கு சென்றடையும்.

மறுநாள் பயண ஆரம்பம் பதுளை – காலை 7.20 மணிக்கு

பயண ஆரம்பம், கொழும்பு கோட்டை – காலை 4.03 மணிக்கு சென்றடையும்

இந்த ரயில் கொழும்பு கோட்டை, பொல்ஹாவெல, பேராதனை சந்தி, கம்பளை, நாவலப்பிட்டி, ஹற்றன், தலவாக்கலை, நாணு ஓயா, அப்புத்தளை, தியதலாவ, பண்டாரவளை, எல்ல, பதுளை ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.

கொழும்பு கோட்டையில் இருந்து குளிரூட்டப்பட்ட பயண கட்டண விபரம்:

முதலாம் வகுப்பு நாணு ஓயா – 1,500 ரூபா

எல்ல – 1,600 ரூபா

பதுளை – 1,700 ரூபா

2 ஆம் வகுப்பு

நாணு ஓயா – 800 ரூபா

எல்ல – 900 ரூபா

பதுளை – 1,000 ரூபா

Economic class

நாணு ஓயா – 500 ரூபா

எல்ல – 600 ரூபா

பதுளை – 700 ரூபா

Related Articles

Back to top button
image download