உலகம்செய்திகள்

தென்னாபிரிக்காவில் பாரிய மோதல் : 72 பேர் பலி..!

தென்னாபிரிக்காவில் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ததை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தென்னாபிரிக்காவில் கடந்த 9 ஆண்டுகளாக ஜனாதிபதியாக பதவி வகித்த ஜேக்கப் ஸூமா (Jacob Zuma) ஊழல் குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டு 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் தென்னாபிரிக்கா முழுவதும் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் முதல் தென்னாபிரிக்காவில் பல பகுதிகளிலும் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 72 க்கும் கூடுதலானோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். தென்னாபிரிக்காவின் ஒரு சில நகரங்களில் வர்த்தக நிலையங்களை கொள்ளையிடுதல் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்களில் இவர்களில் பலர் ஈடுபடுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டுள்ளன.

பதற்ற நிலையை அடுத்து 800 க்கும் கூடுதலானோர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். 1990ம் தசாப்தத்தில் ஏற்பட்ட கறுப்பு வெள்ளையின மோதல்களின் பின்னர் தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட பாரிய மோதல் இதுவாகுமென விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

வைப்பகப் படம்

Related Articles

Back to top button