விளையாட்டு

தென்னாபிரிக்காவை வீழ்த்துமா இலங்கை ? முதல் டெஸ்ட் போட்டி இன்று.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை
ஆரம்பமாகவுள்ளது.

செஞ்சூரியனில் நடைபெறவுள்ள போட்டி இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் ஒன்று
முப்பதுக்கு ஆரம்பமாகவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் உலக சம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாக இந்த
தொடர் நடத்தப்படவுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவுக்கு வந்த லங்கா பிரிமியர் லீக்
கிரிக்கெட் தொடரில் உபாதைக்குள்ளான ஏஞ்சலோ மெத்தியூஸ் இந்த தொடரில்
விளையாடவில்லை.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியை பொருத்தவரையில் கடந்த சில மாதங்களாக
அணித்தலைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் விக்கெட் காப்பாளரான குயின்டன் டி கொக் தென்னாபிரிக்காவின்
மூன்று விதமான போட்டிகளுக்கான அணித்தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அதன்பிரகாரம் டெஸ்ட் அரங்கில் சொந்த மண்ணில் குயின்டன் டி கொக் தலைமையில்
முதன்முதலாக களமிறங்கவுள்ளது.

செஞ்சூரியன் மைதானத்தில் இதுவரையில் இலங்கை அணிக்கு எதிராக தென்னாபிரிக்கா
விளையாடியுள்ள சகல டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளது.

எனினும் கடந்த வருடம் தென்னாபிரிக்காவை சொந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட
டெஸ்ட் தொடரில் இலங்கை அணி வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button