...
Breaking Newsஉலகம்செய்திகள்

தென் ஆபிரிக்காவின் பாராளுமன்ற கட்டிடத்தில் பாரிய தீவிபத்து

தென் ஆபிரிக்காவின் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பாரிய தீ பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கேப் டவுன் பகுதியிலுள்ள கட்டிடத்திலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது

பாராளுமன்ற கட்டிடடத் தொகுதியின் கூரையிலிருந்து பாரிய தீ பிழம்புகள் வெளியேறி வருவதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் குறித்த பகுதியில் கரும் நிரத்திலாக புகை மண்டலம் தென்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் பெருந்திரளான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Related Articles

Back to top button


Thubinail image
Screen