...
விளையாட்டு

தென் ஆபிரிக்க அணிக்கு 204 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்த இலங்கை அணி 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் சரித் அசலன்க 2 பவுண்டரிகள் அடங்களாக 47 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் தென் ஆபிரிக்க அணியின் கேஷவ் மஹராஜ் 38 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய, தென் ஆபிரிக்க அணி 204 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெத்தாட உள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen